RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
காஷ்மீர் தாக்குதலை அடுத்து இன்று மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்தும் , அரசு இதுவரை எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாராளுமன்ற நூலக அரங்கில்பிரதமர் மோடி தலைமையில் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு சூழல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.















