fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கட் நாளை முதல் விநியோகம்-தேர்வுத்துறை!

சென்னை;

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என்று  தேர்வுத்துறை  தெரிவித்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன்.15-ம் தேதி துவங்குகிறது. இத்தேர்வை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.

இந்த நிலையில்  இன்று வெளியிடப்பட்டுள்ள அறிகையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை பிற்பகல் முதல் விநியோகிக்கப்படும்.

மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது அரசின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போன்றே 11 மற்றும் 12-ம் வகுப்பு ஹால்டிக்கெட்டும் வெளியாகிறது.

தேர்வு தொடர்பான விவரங்களை அறிய தேர்வு கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close