fbpx
OthersRE

அடுத்து என்ன நடக்கும் ? நாம் என்ன செய்ய வேண்டும்

உலகில் நிறைய விஷயம் நமக்கு தெரியாதவண்ணம் உள்ளது. சில விஷயங்கள் பார்த்தால் புரியும், சில விஷயங்கள் கேட்டால் புரியும், சிலது புரியாமலேயே இருக்கும். அதில் சிலவற்றை தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.

இன்று நாம் தெரிந்துகொள்ள போவது ஒன்று பூமர் , இன்னொன்று ஜெனரேஷன் சி , இந்த ஜெனரேஷன் சி என்பது 2020க்கு பிறகு பிறந்த அணைத்து குழந்தைகளையும் ஜெனரேஷன் சி வகை குழந்தைகள் என்று சொல்லுவார்கள்.ஜெனரேஷன் கொரோனா வைரஸ் என்பது தான் அதன் விளக்கம்.boomer என்றால் முதியவர்கள் இணையவாசிகள் எப்படி அழைப்பார்கள் என்றால் boomers என்று அழைப்பார்கள். அதேபோல் மேற்குலக இணையதளவாசிகள் எப்படி அழைப்பார்கள் என்றால் boomers remover என்று அழைப்பார்கள் காரணம் இந்த கொரோனா வைரஸ் முதியவர்களை அதிகம் கொன்று குவிக்கிறது.

உலகில் உருவாகி உலகையே உலுக்கி எடுத்து வரும் இந்த கொரோனா வைரஸ் இத்தாலி , ஸ்பெயின் , அமெரிக்கா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நாடுகளையும் தாக்கிவருகின்றது. 155 நாடுகளின் பொருளாதாரம் அகல பாதாளத்தில் சென்றுவிட்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும் பலர் இதன் ஆபத்து என்னவென்று தெரியாமல் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் சீனாவில் இந்த கொரோன வைரஸ் தாக்கியபோது ஜனவரி மாதம் அவர் என்ன கூறினார். சீனா இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறிவிட்டது இதே அமெரிக்காவாக இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த கொரோனா வைரஸை தீர்த்துக்கட்டி இருப்போம் என்று கூறினார்.அதுமட்டுமல்லாமல் அமெரிக்கா சீனாவிற்கு உதவி செய்ய தயாராக உள்ளது என்றும் கூறினார்.

ஆனால் இரண்டு மாதம் கழித்து ஏப்ரல் மாதத்தில் பார்த்தால் கொரோனா பாதிப்பில் சீனா, இத்தாலி, இஸ்பெயின் போன்ற நாடுகளையும் தாண்டி முதல் இடத்தில் அமெரிக்கா வந்துள்ளது. அமெரிக்கா மிக வளர்ச்சி அடைந்த நாடக இருந்தாலும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் போராடி வருகின்றது.

இவ்வாறு பல நாடுகளையும் கதறவைக்கும் இந்த மாதிரியான ஒரு வைரஸ் வரப்போவதாக பலர் கடந்த வருடமே கூறியிருந்தனர். எனினும் அமெரிக்கா இதை ஏன் கண்டுகொள்ளவில்லை என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இப்போ வந்திருக்கின்ற இந்த கொரோனா வைரஸ் 7-ஆம் வகையை சார்ந்தது 6-ஆம் வகைதான் சார்ஸ். ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு வைரஸ் வந்துகொண்டே உள்ளது 6-ஆம் தலைமுறை வகை வைரஸை விட 7-ஆம் தலைமுறை வைரஸ் மிகவும் ஆபத்தானதாகவும், அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதை கண்டுகொள்ளாத அமெரிக்கா இன்று பெருமளவில் ஆபத்தான நிலையில் உள்ளது. வளர்ந்த நாடு , வல்லரசான நாடு என்று கூறப்பட்ட அமெரிக்காவினாலேயே இந்த கொரோன வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை அப்படி இருக்கும் போது . இந்தியாவில் இந்த வைரஸின் ஆதிக்கம் அதிகரித்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாததே உண்மையாகும். அதனால் ஒவ்வொருவரும் அலட்சியத்தை விட்டு பாதுகாப்பாக இருந்து அனைவரையும் காத்துக்கொள்ளவேண்டும்.ஏனென்றால் இங்கு மாஸ்க் , மருத்துவ உபகரணங்கள் போன்றவை குறைந்த அளவே உள்ளதாலும் , நாடு முழுவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இதை தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளும் மூடப்பட்டு உள்ளது.

எனவே இந்த வைரஸின் தீவிரத்தை உணர்ந்து அலட்சியத்தை விட்டு விழிப்புடன் செயல்படுவோம் கொரோனாவை எதிர்கொள்வோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close