fbpx
Others

தேனி-அல்லிநகரம்-சுகாதாரத்துறையின்அவலநிலை நோய்பரவும் அபாயம்

தேனி மாவட்ட நிர்வாகமே அல்லிநகரம் நகராட்சியே!! சுகாதாரத்துறையே!!! தேனி புதிய பேருந்து நிலையம் நகரப் பேருந்துகள் நிற்க்குமிடத்தில் பல்லாயிரம் மக்கள் தினமும் வந்து செல்லும் பகுதியில் சாக்கடை கழிவுகள், மலக்கழிவுகள் , நிரம்பி வழியும் அவலத்தை பாருங்கள் ??? கழிவுகளை முறையாக அள்ளி அப்புறப்படுத்துவதற்கு பதிலாக “சுக்குப்பொடி” போடுவது போல் ஃபிளிச்சிங் பவுடர் போட்டுவிட்டால் துர் நாற்றம் போய்விடுமா!? தீபாவளி பண்டிகை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நேரத்தில் பேருந்துகள் 15 முதல் 30 நிமிடங்கள் பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. அந்த நேரத்தில் குழந்தைகள் முதியவர்கள் துர்நாற்றத்தை சுவாதிப்பதால் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். அதனால் நோய் தொற்றுகள் ஏற்படும் நிலை உள்ளது. பெரும் தொற்றுகள் பரவும் முன்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.? துரித நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்???…….………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close