fbpx
Others

திருவள்ளூரில் இருளர் மக்களோடு 9 ம் ஆண்டு மகிழ்ச்சி சமத்துவ பொங்கல் விழா .

ட்ரீம்ஸ் மல்டி பர்ப்பஸ் சேவை அறக்கட்டளை
திருவள்ளூர் ஸ்பார்ட்டன்ஸ் ரோட்டரி சங்கம் மகிழ்ச்சி அறக்கட்டளை இணைந்து ஒன்பதாவது வருடமாக சமுதாயத்தில் பின்தங்கிய மக்களோடு அவர்களது ஊருக்கே சென்று கொண்டாடும் சமத்துவ பொங்கல் விழா இவ் வருடம் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள இலுப்பூர் இருளர் காலனியில் அமைந்துள்ள ஐந்து கிராமத்திற்கு மேற்பட்ட இருளர் மக்கள் 300க்கும் மேற்பட்ட மக்களோடு புத்தாடைகள் பொங்கல் பரிசுகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக திருநின்றவூர் ட்ரீம்ஸ் மல்டி பர்ப்பஸ் அறக்கட்டளை நிறுவனர் சந்தியா அவர்கள் பங்கு பெற்றார் மேலும் நிகழ்விற்கு திருவள்ளூர் ஸ்பார்ட்டன்ஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ராஜா ரவி செயலாளர் விஜயகுமார் சங்கப் பணி இளங்கோவன் மற்றும் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் கரண்ட் கார்த்திக் மற்றும் உறுப்பினர்கள் கைவண்டுர் டேவிட் பேட்டரசன் மற்றும் மகிழ்ச்சி அறக்கட்டளை உறுப்பினர்கள் ட்ரீம் மல்டி பர்ப்பஸ் சோசியல் சர்வீஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை இருளர் மக்களின் தலைவர் பழனி அவர்கள் ஒருங்கிணைத்தார் நிகழ்ச்சியின் முடிவில் மக்களுக்கு பிரியாணி அளிக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது பொங்கல் தினத்தை முன்னிட்டு தங்கள் கிராமத்திற்கே வந்து பொங்கல் பரிசை அளித்த அனைவருக்கும் ஊர் பொது மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close