திருப்பரங்குன்றம்:நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி…..
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அதுபோலவே, மலையின் மேலே இருக்கும் சிக்கந்தர் ஷா அவுலியா தர்காவுக்கும் இஸ்லாமியர்கள் வருகை தருகிறார்கள். அப்போது, ஆடு, கோழிபலியிட்டுநேர்த்திக்கடன்செலுத்திவழிபடுகிறார்கள்.இந்து அமைப்புகள், “முருகன் குடிகொண்டிருக்கும் திருப்பரங்குன்றம்மலையில்ஆடு,கோழிவெட்டிபுனிதத்தைக் கெடுக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டுகின்றன. இஸ்லாமியர் தரப்பிலோ, “ஆடு, கோழி அறுப்பதால் புனிதம் கெடுவதாக இப்போது சொல்கிறவர்கள் இத்தனை நாள்களாக எங்கேபோனார்கள்…இதுதிட்டமிட்டுமதக்கலவரத்தைத்தூண்டும்
முயற்சி”எனக்கொந்தளிக்கின்றனர்.இந்த பரபரப்பானசூழலில் இன்று(பிப்4)இந்துமுன்னணிஅமைப்பினர்திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது. இன்றும் நாளையும் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட நிர்வாகம்நடைமுறைப் படுத்தியுள்ளது. இருப்பினும் ‘பா.ஜ.க’ மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர், ‘முருகன் மலையை மீட்போம்…’ என திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குள் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுவருகின்றனர்.அசாம்பாவிந்தங்களைதவிர்ப்பதற்குமுன்னெச்சரிக்கையாக திருப்பரங்குன்றம் வருகின்றவழிமுழுக்கபோலீஸ்குவிக்கப்பட்டுள்ளது. அரசின் தடையை மீறி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அன்னதானமண்டபத்தில் பாஜக கொடியுடன் வந்து முழக்கமிட்டு, ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர், பா.ஜ.க தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பா.ஜ.க,இந்துஅமைப்பின்சிலமுக்கியப்புள்ளிகள்வீட்டில்காவலில்வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் 144 தடை உத்தரவை ரத்து செய்து, போராட்டத்துக்கு அனுமதி வழங்கஉத்தரவிடக்கோரிஇந்துஅமைப்புகள்சார்பில்உயர்நீதிமன்றம்மதுரைகிளையில்வழக்குதொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணையின் போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “மதுரையில் மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11-ம் தேதி வரை முருகன் கோவில் தைமாதவிழாக்காலம்என்பதால்இதுபோன்றசூழலில்போராட்டம்நடத்தஅனுமதிக்கமுடியாது”என்றுதமிழகஅரசுதரப்பில்வாதிட்டார்.உயர்நீதிமன்றம், “போராட்டத்தில் பங்கேற்றால் சட்ட நடவடிக்கை என்பது சரியான முறை இல்லை” என்றும் இந்து முன்னணி அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டுள்ள நிலையில், பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பல நிபந்தனைகளுடன் ஆர்பாட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது.