fbpx
Others

தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில் 2023 மாணவ மாணவிகள் சிலம்ப சாதனை நிகழ்ச்சி!

உலக சிலம்ப ஆசான்கள் சங்க தலைவர். என் .ஆர். தனபாலன் தொடங்கி வைத்தார்..
தமிழ்நாடு சிலம்பக் கழகம் சார்பில் யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து உலக வரைபடத்தில் 2023 மாணவ மாணவிகள் மற்றும் ஆசான்கள் நின்று சிலம்பம் சுற்றிய சாதனை நிகழ்ச்சி சென்னை கோவூர் தண்டலம் மாதா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிலம்ப கழக தலைவர் டாக்டர். சி .எம். சாமி தலைமை தாங்கினார்.
துணை தலைவர்கள் கலை முதுமணி. முருகக்கனி. கோபால் காவல்துறை உதவி ஆணையாளர்கள் ஸ்ரீகாந்த். ஆதிமூலம். ஒருங்கிணைப்பாளர்கோ. உதயசூரியன். முன்னிலை வகித்தனர் .தமிழ்நாடு சிலம்பக் கழக பொதுச் செயலாளர் சிலம்ப ஜாம்பவான். ஞானம் வரவேற்றார் . உலக வரலாற்றில் முதல் முறையாக நடந்தசிலம்ப சாதனை நிகழ்ச்சியை உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் தலைவர்
என் ஆர்.தனபாலன் தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.நிகழ்ச்சியில் மலேசியா சாண்டோ.ரத்தினம். ஆந்திரா-தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் துரை. குன்றத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர். வந்தே மாதரம். கோவூர் ஊராட்சி தலைவர். சுதாகர். தண்டலம் ஊராட்சி தலைவர் கே. அரசு உள்பட உள்ளாட்சி நிர்வாகிகள் சிலம்ப ஆசான்கள். ஆசிரியர்கள். மாணவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆ. மனோகரன் சான்றிதழ் . பதக்கம் வழங்கினார். தென் சென்னை கிழக்கு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் .என்.டி. மோகன் ஆசான்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.முடிவில் தமிழ்நாடு சிலம்பக் கழக பொருளாளர். ஜெ. ஈசன் நன்றி கூறினார்.

 

Related Articles

Back to top button
Close
Close