fbpx
Others

தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்– புதுச்சேரி முதல்-மந்திரி குறித்து லியோனி

புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் தேசிய கல்வி கொள்கையின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போதுபுதுச்சேரி முதல்-மந்திரி குறித்து லியோனி விமர்சனம் - தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் மேடையில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் லியோனி, புதிய கல்விக் கொள்கையில் தமிழை பறித்து விட்டார்கள் என்று கூறுகிறார். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தாய்மொழி கல்வி ஊக்கப்படுத்தப்படுகிறது என்பதும், 22 மொழிகளில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதும் தெரியாமல் ஒரு பாடநூல் கழகத்தின் தலைவர் தமிழகத்தில் இருக்கிறார் என்பது வேதனையாக உள்ளதுமேலும் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலையாட்டி பொம்மையாக இருக்கிறார் என லியோனி விமர்சித்தது கடும் கண்டனத்திற்குரியது. நல்ல திட்டங்களைக் கொடுத்த முதல்-மந்திரியை அவ்வாறு விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close