fbpx
Others

வள்ளியூர் பசுமை இயக்கத்தின் பசுமைப் பணிகள்….

சுமார் 5 வருடங்களுக்கு முன்பு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் இன்று பெரிய மரமாக வரங்களாக செழுமையாக வளர்ந்துள்ளது. தற்போது 16.07.25 அன்று முன்பு மரக்கன்றுகளில் வைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகளை அகற்றி பராமரிப்பு பணி நடைபெற்றது. இப்பணியில் வள்ளியூர் பசுமை இயக்கத் தலைவர் பசுமை நாயகன் க.சித்திரை பசுமை இயக்க நிர்வாகிசிவ சுப்ரமணியன் மற்றும் காவல் நிலையம் அருகில் உள்ள தோட்ட உரிமையாளர் ஆகியோர் இச் சேவையில் ஈடுபட்டனர்.இம்மரங்கள் முன்பு வள்ளியூரில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்து நாங்குநேரியிலும் பொறுப்பு வகித்து வந்த ஹரிஹரன் பிரசாத் அவர்கள் தலைமையில் மரம் நடும் பணி நடைபெற்றது. அப்போதைய உதவி ஆய்வாளராக இருந்த சஜீவ் அவர்களும் இப் பணியில் உடன் இருந்தார். சஜீவ் அவர்கள் வள்ளியூரில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த போதே வள்ளியூர் காவலர்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் காவல் நிலையங்கள், பொது இடங்களில் மரங்கள் வைக்க பசுமை இயக்கத்தோடு இணைந்து பசுமை இயக்கத்திற்கு ஊக்கமும் கொடுத்து அவரும் பசுமைச் சேவையில் ஈடுபட்டு ஒரு பசுமை அதிகாரியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது மானூரில் பணியாற்றி வருகிறார்.முன்பு வைக்கப்பட்ட மரங்களுக்கு நீரூற்றி பாதுகாத்து வளர்த்து வரமாக்கிய அப்போதைய ஆய்வாளர், உதவியாளர், தலைமை காவலர்கள், தனி பிரிவினர், மற்றும் இப்போது பணியாற்றுகின்ற ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் அனைவருக்கும், முன்பு மரம் வைப்பதற்கு முன் வந்த வள்ளியூர் பசுமை இயக்க நிர்வாகிகளுக்கும்,பொருள் உதவி, நிதி உதவி, உடல் உழைப்பு தந்த நல் உள்ளங்களுக்கும் பசுமை இயக்கத்தில் பயணித்து வரும் பசுமை இயக்க நிர்வாகிகளுக்கும் இச்செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வரும் சட்ட களஞ்சியம் பத்திரிகை ஆசிரியர் கலைமணி அவர்களுக்கும் வள்ளியூர் பசுமை இயக்கத்தின் சார்பாக அதன் தலைவர் பசுமைநாயகன் க. சித்திரை நன்றியை தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close