fbpx
Others

சிறப்பு வாய்ந்த சந்திரகிரகணம் இன்று மீண்டும் தோன்றும்….

 நாடு முழுவதும் ஹோலி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் சந்திரகிரகணம் இன்று ஏற்படுகிறது. இந்தியா போன்ற பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறைந்த நாடுகளில் கிரகணங்கள் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.அதிலும் இன்று ஹோலி பண்டிகை மற்றும் பங்குனி உத்தர நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நாளில் சந்திரகிரகணம் வருவது குறித்து பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. பங்குனி உத்தர நாள் மற்றும் ஹோலி கொண்டாடப்படும் போது சந்திரகிரகணம் ஏற்படுவது மிகவும் அரிதான விஷயம் எனவும் இதற்கு முன் இப்படிய ஒரு சந்திரகிரகணம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று உணவு உட்கொள்ளுதல், வெளியே செல்லுதல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.இந்நிலையில் சந்திர கிரகணம் என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம்; ஒவ்வொரு ஆண்டும் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணங்கள் ஏற்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது படும். இதைத்தான் சந்திர கிரகணம் என்று கூறுவார். இதில் முழு சந்திர கிரகணம், பகுதி நேர சந்திர கிரகணம் என 2 வகைகள் உள்ளன. இன்று ஏற்படப்போவது பகுதி நேர சந்திர கிரகணம் தான். அதாவது பூமியின் நிழல் முழுமையாக சந்திரன் மீது விழாமல், பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்புகள் மட்டும் சந்திரன் மீது விழும்.இதனால் நிலவு முழுமையாக மறையாது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.சந்திர கிரகணம் இந்திய நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 35 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் பகல் பொழுது இருப்பதால் இதனை பார்க்க முடியாது. மேற்குறிப்பிட்ட நாடுகளில், உயர் திறன் கொண்ட தொலை நோக்கியை வைத்து இதை மிக தெளிவாக பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close