fbpx
Others

கோவை–குருத்தோலை ஞாயிறு பவனி கோலாகலம் – விசுவாசிகள் திரளாக பங்கேற்பு…

கோவை மாவட்டம் பழைய வால்பாறை பகுதியில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி கோலாகலம் – விசுவாசிகள் திரளாக பங்கேற்பு
கோவை மாவட்டம் பழைய வால்பாறை CSI ஆலயத்தில் இன்று கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தி உணர்வுடன் குருத்தோலை ஞாயிறு பவனியை சிறப்பாகக் கொண்டாடினர். இயேசு கிறிஸ்து எருசலேமுக்கு வெற்றிகரமாக நுழைந்த நிகழ்வை நினைவுகூரும் இந்த நாளை முன்னிட்டு, காலை முதலே பல ஆலயங்களில் விசுவாசிகள் திரண்டனர்.பனை இலைகளை கைகளில் ஏந்தியபடி, “ஓசன்னா” எனும் புகழ்ச்சிக் குரல்களுடன் பவனி தொடங்கப்பட்டது. இந்த பவனி வால்பாறை நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தி பாடல்கள், ஜெபங்கள் மற்றும் ஆராதனை முழக்கங்களுடன் நடைபெற்றது. சிறுவர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர் என அனைத்துதரப்பினரும்ஆர்வமுடன்கலந்துகொண்டு,ஆன்மீகஉற்சாகத்தைவெளிப்படுத்தினர்.பவனியில் கலந்து கொண்ட விசுவாசிகள், இயேசுவின் தாழ்மையும் அன்பும் நிறைந்த வாழ்க்கையை நினைவுகூர்ந்து, அதைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். சில இடங்களில் விசுவாசிகள் பனைஇலைகளை வீதிகளில் விரித்து வைத்து மரியாதை செலுத்தியதும் காணப்பட்டது.பவனி நிறைவடைந்த பின்னர் ஆலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஆயர்கள் வார்த்தையை அறிவித்து, சமாதானம், அன்பு மற்றும் சகோதரத்துவம் குறித்து உரையாற்றினர். மேலும், உலக அமைதிக்கும் மக்களின் நலனுக்கும் சிறப்பு ஜெபங்கள் செய்யப்பட்டது.

இந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி வால்பாறை பகுதியில் ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து, கிறிஸ்தவ சமூகத்தினரிடையே மகிழ்ச்சியையும் பக்தி உணர்வையும் அதிகரித்தது. கோவை மாவட்ட புகைப்படக் கலைஞர் ஜெயப்பிரகாஷ் D

Related Articles

Back to top button
Close
Close