fbpx
Others

“கொரோனா மர்மம் அவிழ்ந்தது.”.வாயை திறந்த சீனஆய்வாளர்கள்

"கொரோனா மர்மம் அவிழ்ந்தது.." இப்படிதான் தோன்றியதாம்.. ஒரு வழியாக வாயை திறந்த சீன ஆய்வாளர்கள்.. பரபர
  • பெய்ஜிங்: சீனாவில் கொரோனா உருவானது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கொரோனா எப்படித் தோன்றியது என்பது குறித்து இதுவரை தெரியாமலேயே இருந்து வந்தது. இதனிடையே சீனா ஆய்வாளர்களே இது குறித்த முக்கிய டேட்டாக்களை பகிர்ந்துள்ளனர், கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவியது. அதன் பிறகு அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளிலும் கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளும் மிக மோசமாகவே இருந்தது.கொரோனா வைரஸ்: கொரோனா உலக நாடுகளில் உச்சம் தொட்டு, அதன் பின்னர் வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டு அது கட்டுக்குள்ளே வந்துவிட்டது. இருப்பினும், கொரோனா வைரசின் தோற்றம் என்பது இன்னுமே மர்மமாகவே இருந்து வருகிறது. சீனாவில் இருக்கும் வூஹான் விலங்கு மார்கெட்டில் இருந்து வந்ததாக முதலில் சொல்லப்பட்டது. அதேநேரம் மற்றொருபுறம் வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வு மையத்தில் இருந்தும் இது பரவியிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. கொரோனா பரவ தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட இது இன்னுமே மர்மமாகவே இருந்து வருகிறது.சீனா ஆய்வாளர்கள் இதில் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், சீனா ஆய்வாளர்கள் கொரோனா பரவ தொடங்கிய 2020 காலகட்டத்தில் வூஹான் சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் டேட்டாக்களை வெளியிட்டுள்ளனர். கொரோனா எப்படித் தோன்றியது என்ற மர்மத்திற்கு இது பதிலைத் தரவில்லை என்ற போதிலும், இது கொரோனா குறித்துப் பல முக்கிய தகவல்களைத் தருகிறது.

எப்படி தோன்றியது: இது குறித்து நேச்சர் ஆய்விதழில் சில முக்கிய தரவுகள் வெளியாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் கொரோனா நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்குகளின் டிஎன்ஏ இருந்தது இதில் உறுதியாகியுள்ளது. கொரோனா தோற்றம் குறித்த மர்மம் ஹுவானன் கடல் உணவு சந்தையைச் சுற்றியே இருக்கிறது. கொரோனா வைரஸ் அங்கே உருவானதா இல்லை ஆய்வகத்தில் உருவானதா என்பதே இப்போது பெரிய மர்மமாக இருந்து வருகிறது.இது குறித்து நேச்சர் ஆய்விதழ் மேலும் கூறுகையில், “கொரோனா வைரஸ் மனிதர்களைத் தாக்கும் முன்பு, ஒரு விலங்கு இடைநிலை ஹோஸ்டாக இருந்திருக்கலாம் என்பதையே இது காட்டுகிறது. இருப்பினும், அது நிச்சயம் விலங்கில் இருந்து தான் பரவியது என்பதற்கான உறுதியான ஆதாரத்தை வழங்கத் தவறிவிட்டது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து வெளியான மரபணு டேட்டாகளில் இது தான் முக்கியமானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.   விரிவான டேட்டா: கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து 2020 ஜன.1ஆம் தேதி ஹுனான் சந்தை மூடப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து மொத்தம் 923 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. ஜனவரி 18 முதல், 18 வகையான விலங்குகளிடமிருந்து 457 மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். பதப்படுத்தி வைக்கப்பட்ட பெட்டிகள், விலங்குகள், மீன் தொட்டிகள் ஆகியவற்றில் இருந்து எடுத்து இந்த விரிவான ஆய்வை நடத்தியுள்ளனர். சீனாவின் நோய் மையத்தைச் சேர்ந்த வில்லியம் ஜே லியு, பெய்பே லியு, வென்வென் லீ, ஜியுவான் ஜியா மற்றும் சியாவோ ஹீ, தையானில் உள்ள ஷாண்டோங் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸைச் சேர்ந்த வெய்ஃபெங் ஷி மற்றும் யுன் என டாப் ஆய்வாளர்கள் இணைந்து கொரோநா குறித்த இந்த டேட்டாவை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close