fbpx
Others

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியதுகல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 23-ஆம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது மாமல்லபுரம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 23-ஆம் தேதி காலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு 9.15 மணியளவில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. முதற்கட்டமாக 110 மெகா வாட் மின் உற்பத்தியை துவங்கி படிப்படியாக முழு உற்பத்தி திறனை அடையும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தனர். ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நான்கு ஆண்டுகளாக முதல் அணு உலை மின் உற்பத்தி செய்யாமல் பழுதடைந்து உள்ளது. அதன் கோளாறு என்ன? அதன் ஆயுள் காலம் முடிந்ததா? மீண்டும் மின் உற்பத்தியை துவங்குமா? என்பது இன்றுவரை கேள்விக்குறியாக உள்ளது

Related Articles

Back to top button
Close
Close