fbpx
Others

ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை வஞ்சிப்பது குறித்துநிதியமைச்சர்இடம் கேள்வி..

பாஜக அரசு மாநிலங்களை வஞ்சிப்பது குறித்த செய்தியாளர் கேள்விக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிண்டல் செய்யும் வகையில் பதிலளித்தது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அங்கு நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க ஒன்றிய அரசு என்ன செய்ய போகிறது என கேள்வி..? எழுப்பப்பட்டது.அதற்க்கு பதிலளித்த அவர் முதலமைச்சர் சித்தராமையா 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்ப்பாசன பணிகளை செயல்படுத்த விடாமல் தடுப்பதாவும், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பை உறுதி செய்யும் ஜல் ஜீவன் திட்ட பணிகளையும் அவர் நிறுத்தி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை வஞ்சிப்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாமா என கேட்ட போது கிண்டல் செய்யும் வகையில்ஒலிஎழுப்பிநிர்மலாசீதாராமன்பதிலளித்ததுசர்ச்சையைஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் பயங்கரவாத செயல்பாடு அதிகரித்துள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்படுவதாகவும், நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள நிலையில் அதற்கு கர்நாடக காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close