fbpx
Others

ஐகோர்ட்-வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும்

  பணப்பலன்கள்பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களில் வட்டி வருவாய் ரூ.40,000க்கு அதிகமானால் வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டுமென மாநில அரசு தலைமை கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு 2021ல் சுற்றறிக்கை விடுக்கப்பட்டது.வருமான வரிச் சட்டத்தின் 194ஏ மற்றும் 194என் ஆகிய பிரிவுகளின் கீழ் வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சுற்றறிக்கை ரத்து கோரி சென்னிமலை சிரகிரி முருகன் தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட 5 சங்கங்கள் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது பேசிய நீதிபதி அரசு வழங்கும் உதவி நேரடியாக பயனாளருக்கு வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கருதுகிறது.இல்லாவிட்டால் ஏழை விவசாயிகள், நெசவாளர்களிடம் பணத்தை மோசடி செய்து விடுவார்கள். அரசால் ரொக்கமாக வழங்கப்படும்போது, தவறாக கையாளப்பட வழிவகுப்பதுடன், ஊழலுக்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்கலாம் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close