fbpx
Others

எடப்பாடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கேள்வி…?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களை சுட்டு வீழ்த்தியது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கேள்வி எழுப்பியதால் சட்டப்பேரவையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.  எடப்பாடி பழனிசாமி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி மனித தன்மையற்று அராஜகமாக நடந்துகொண்ட சம்பவம் காவல் நிலையத்தில் வீடியோ கேமராபழுதடைந்ததாால் இந்த நிகழ்வு குறித்த பதிவுகள் இல்லை என்று விசாரணை அதிகாரியிடம் கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.முதல்வர் மு.க.ஸ்டாலின்: அம்பாசமுத்திரத்தில் நடந்த சம்பவம் குறித்து தகவல் வெளியான உடனேயே அந்த காவல் அதிகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். விசாரணை நடத்துவதற்காக ஐஏஎஸ் அதிகாரி அமுதா அங்கு சென்று சென்றார். நேற்று தனது இடைக்கால அறிக்கையையும் அவர் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அமைச்சர் ரகுபதி: அருணா ஜெகதீசன் அளித்துள்ள விசாரணை அறிக்கையில், ஒவ்வொரு நிமிடமும் நடந்த நிகழ்வுகள் முதல்வரிடம் சொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி: 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலையில், அதை தாண்டி திமுக எம்எல்ஏ போராட்டம் நடத்தினார். அதை எப்படி அனுமதிக்க முடியும்.அமைச்சர் கீதா ஜீவன்: இந்த போராட்டம் 100 நாள் நடந்தது. துறை அமைச்சரும், மாவட்ட அமைச்சரும் அந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மாவட்ட கலெக்டர் அன்று அங்கு இல்லை. அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுதான் இதற்கு காரணம்.   (இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)   எடப்பாடி பழனிசாமி: எம்எல்ஏ என்பவர் சட்டத்தை மதிக்க வேண்டும்.அமைச்சர் ரகுபதி: காக்கா குருவி போல் சுடப்பட்டதாகவும், வேனுக்கு மேல் நின்று சுட்டதாகவும் விசாரணை அறிக்கையிலேயே உள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின்: அங்கு 100 நாட்கள் போராட்டம் நடந்திருக்கிறது. அப்போது ஏன் முதல்வர் அவர்களை அழைத்து பேசவில்லை. அமைச்சர்களும் பேசவில்லை. அவர்கள் கலெக்டரைத்தான் சந்திக்க சென்றனர்.
எடப்பாடி பழனிசாமி: போராட்டக்காரர்களை 14 முறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அவை முன்னவர் துரைமுருகன்: கடைசி நாள் போராட்டம் அன்று கலெக்டர் அங்கு இருக்க வேண்டாமா? எனவே, துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கலெக்டரும் ஒரு காரணம்.
எடப்பாடி பழனிசாமி: அது 20 ஆண்டு கால போராட்டம். அதிமுக ஆட்சியில்தான் அந்த ஆலை மூடப்பட்டது.  முதல்வர் மு.க.ஸ்டாலின்: முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அவை முன்னவர் துரைமுருகன்: தர்மபுரியில் பஸ்சில் கல்லூரி மாணவிகள் 3 பேர் எரித்து கொல்லப்பட்டது யார் ஆட்சியில்? பாமக போராட்டம் நடத்தியபோது சுட்டு வீழ்த்தப்பட்டதில் 20 பேர் பலியானது யார் ஆட்சியில்? கும்பகோணத்தில் குளிக்க சென்றபோது 250 பேரை கொன்றது அதிமுக ஆட்சியில்தான்.
எடப்பாடி பழனிசாமி: ஒவ்வொரு ஆட்சியிலும் விரும்பத்தகாத செயல்கள் நடந்துள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். தவறு நடந்ததும் உடனே நடவடிக்கை எடுக்கும் ஆட்சி இது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வழக்கு என்னவானது? கோடநாடு வழக்கு என்னவானது? நாங்கள் தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.எடப்பாடி 2 மணி நேரம் விவாதம்: போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தபோது இறுதியாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் மதியம் 3.07 மணிக்கு பேச தொடங்கினார். அவர் ஒரு மணி நேரம் 54 நிமிடம் அதாவது 2 மணி நேரம் பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close