மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி, சுகாதாரத்துறை நடவடிக்கை என்ன..?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் நடக்கும் அவலநிலை!!! மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுப்பார்களா ??? தேனி மாவட்டம், தேனியில் ஆனந்த மகால் அருகே பல ஆண்டுகளாக கழிவுநீர் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஏனோதானோ என்று அவ்வப்போது பெயரளவிற்கு துடைத்து விட்டு சென்று வந்த நகராட்சி நிர்வாகத்தினர்க்கு, இப்போது தான் கழிவுநீர் அடைப்புக்கான குறுகிய பாதையின் மேல் உள்ள பாலம் கண்களுக்கு தெரிய ஆரம்பித்து உள்ளது போல !!! தற்போது போர்க்கால அடிப்படையில் இந்த கழிவுநீர் சாக்கடையை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இங்கு மட்டுமல்ல………….. தேனி பெரியகுளம் சாலையில் உள்ள அஜந்தா லாட்ஜின் பின்புறம் உள்ள பழைய பாப்பு ராஜா தெருவிலும் இதே நிலை தான்! இந்த தெருவிலும் கழிவுநீர் சாக்கடையில் அடைப்புஏற்பட்டுகழிவுநீர்சாக்கடையில் செல்லாமல் தெருவிலேயே செல்லுகின்ற அவலநிலை! இது சம்பந்தமாக நமது செய்தியில் பல தடவை வெளியிட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பது எதற்காக? இதில் யாருடைய தலையீட்டால் பணிகளை செய்யாமல்…. இருப்பது ஏன்? இந்த தெருவில் மக்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லுகின்ற அவலநிலை! மேலும் தேனியில் இராஜ வாய்க்கால் அகற்றும் பணிகளும் கிடப்பிலேயே உள்ளது. இதில் நீதிமன்ற ஆணையையே கிடப்பில் போட்டுவிட்டு என்ன செய்து வருகிறது மாவட்ட நிர்வாகம் ! நீதிமன்ற ஆணையில் கூறயுள்ளபடி நீர் நிலைகள் மீது அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை …. அரசு கட்டிடங்களாக இருந்தாலும் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டுள்ளது எதற்காக? மற்றும் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு பாதையின் வலதுபுறத்தில் கண்ட கண்ட இடங்களில், சிறுநீர் கழித்தல், மேலும் குப்பைக் கிடங்கு போன்று கழிவுகளை கொட்டி அசுத்தப் படுத்தி… பொதுமக்கள் இவ்வழியாக செல்ல அச்சப்படும் நிலை உள்ளது….? இது போன்ற குறைகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகை ஊடகங்களும், கோரிக்கை வைக்கின்றனர்….. இவையனைத்தும் உடனடியாக சரி செய்வார்களா? அல்லது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா ? என்று பொதுமக்கள் பேசுவது நம் காதுபட கேட்கின்றது.! நாம் பொறுத்து இருந்து பார்ப்போம்……………..
..ஆல்இந்தியாமீடியாஅசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி WHY NOT…..?