fbpx
Others

உச்சநீதிமன்றம் — மணிப்பூர் வன்முறை வழக்குவிசாரிப்பது கடினம்…

மணிப்பூரில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமுதாயத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி சமுதாயத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இரு பிரிவினரிடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது பின்னர் வன்முறையாக மாறியது. கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் தொடர் வன்முறையால், சுமார் 150 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாகி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஒரு வீடியோ வெளியானது. அங்கே மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிலரைக் கைது செய்துள்ளனர். இதற்கிடையே மணிப்பூரில் தொடரும் வன்முறை தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், குறிப்பிட்ட சமூகத்தின் குற்றம்சாட்டின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதை விசாரிப்பது கடினம். மனுவில் வன்முறை, போதைப்பொருள் கடத்தல், வனப்பகுதி அளித்தால் என அனைத்தையும் ஒரே மனுவில் குறிப்பிட்டதை ஏற்க முடியாது. குறிப்பிட்ட கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்தால் வழக்கை விசாரிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close