Others
அரக்கோணம்–தொடர் குற்றத்தில் ஈடுபட்ட சசிகுமார் (எ) கௌதம் என்பவர் குண்டர்கைது…
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் குற்றத்தில் ஈடுபட்ட போக்கிரி குற்றவாளி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.இராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் . தங்ககுருநாதன் அவர்கள் தலைமையில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.விவேகானந்த சுக்லா அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா . அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் குற்றவாளி சசிகுமார் (எ) கௌதம் (வ/30)என்பவர் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்