fbpx
Others

அமைச்சர் கே.எஸ். மஸ்தான்–தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNEGA)வலைத் தளம் தொடங்கி வைத்தார்.

 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின அந்தஸ்து வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மூலம் உருவாக்கப்பட்ட வலைத் தளத்தை (Web Portal) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் இன்று(07.02.2024)தொடங்கிவைத்தார்.தமிழகமுதலமைச்சரின்அறிவுறுத்தலுக்கிணங்க சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் இன்று (07.02.2024) தலைமைச் செயலகத்தில் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின சான்றிதழை வழங்குவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து பெறுவதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மூலம் உருவாக்கப்பட்ட வலைத் தளத்தை (Web Portal) தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் சிறுபான்மையின மக்களின் சமூகம், கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்திடவும், சிறுபான்மையினரின் அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகளை பாதுகாப்பதற்கும் இச்சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திடவும், சிறுபான்மை இனத்தவரை மேம்படுத்துவதற்கும்2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் ஏற்படுத்தப்பட்டு அவ்வியக்ககத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிறுபான்மை இனத்தவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.முன்னதாக, கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து அந்தந்த துறைகளால் வழங்கப்பட்டு வந்தது. அதனை எளிதாக்கும் வகையில் அரசாணை (நிலை) எண்.109, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல(சிந1)த்துறை, நாள் 29.12.2022-ல் இத்துறையின் மூலம் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின அந்தஸ்து வழங்க ஆணை வெளியிடப்பட்டது.09.01.2024 அன்று நடைபெற்ற சிறுபான்மையினர் நலனுக்கான ஆலோசனை கூட்டத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின அந்தஸ்து சான்றிதழை இணைய வழியில் விண்ணப்பித்து பெறுவதற்கான Web Portal இந்த மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.சிறுபான்மையின அந்தஸ்து கோரும் கல்வி நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் எளிய முறையிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் (பொ) வா. சம்பத், சட்ட மன்ற உறுப்பினர் Dr. S. இனிகோ இருதயராஜ், தாவூத் மியாகான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close