fbpx
Others

அமெரிக்காவுக்குஎதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு…..?

Govt planning to hike customs duty on imported Chinese products - India ...ஷாங்காய் ஒத்துழைப்புஅமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும்.இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தது.இந்த அமைப்பின் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகளில் நடைபெறும்.இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமருக்கு சீனா அழைப்புவிடுத்து இருந்தது. இதற்காக இந்தியா வந்த சீன வெளியுறவுமந்திரிவாங்யி,பிரதமரைசந்தித்துநேரில்அழைப்புவிடுத்தார்.பிரதமரும்அந்த  அழைப்பைஏற்றுக்கொண்டார். சீனா பயணத்துக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றார். அங்குடோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவும், ஜப்பானும் இணைந்துஇந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பானதாக உருவாக்கும் என்று தெரிவித்தார்.தியான்ஜின் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்புஅமைப்பின்உச்சிமாநாட்டில்பிரதமர்மோடிகலந்துகொள்கிறார்.இதில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ்ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.இந்த மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கையும், ரஷிய அதிபர் புதினையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுவார். அப்போது இந்திய-சீனா-ரஷியாஇடையேயானஒத்துழைப்பு குறித்தும், உறவு குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும். முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதையடுத்து 2019-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவந்தார்.அதன்பிறகுபிரதமர்மோடிசீனாசெல்லவில்லை. இதனிடையே 2020-ம்சீன அதிபர் ஜின்பிங் இந்தியா வந்தார். அதன் பிறகு பிரதமர் மோடி சீனா செல்லவில்லை. இதனிடையே 2020-ம் ஆண்டுகல்வான்பகுதியில்சீனாஇந்தியாஇடையேநடந்த தாக்குதலுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது.இந்த சூழ்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி, சீனாவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகபரஸ்பர வரி விதித்துள்ள நிலையில் ரஷிய, சீன, இந்திய தலைவர்கள் ஒரே இடத்தில் கூடி பேசுவதன் மூலம் அமெரிக்காவுக்குஎதிரான புதிய வியூகம் ஒன்றை வகுக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close