fbpx
Others

அதிவேக ரயில் சேவை வரலாற்றில் ஒரு மைல்..

எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து .நாட்டின் அதிவேக ரயில் சேவையாக வந்தே பாரத் ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரயில்கள் இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு மைல்கலாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை சென்னையில் இருந்து மைசூர் வழித்தடத்தில் ஒரு வந்தே பாரத் ரயில் தற்போது இயங்கி வருகிறது.இந்நிலையில், கோவை – சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது. கோவை – சென்னை இடையே உள்ள 495.28 கி.மீ தூரத்தை இந்த வந்தே பாரத் ரயில் 6 மணிநேரம் 10 நிமிடங்களில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   வழக்கமாக இந்த ரயில், கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, பகல் 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் சென்றடையும். மேலும், இந்த ரயில் புதன் கிழமையைத் தவிர்த்து வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் இயங்கும் எனவும் கோவை – சென்னை வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. பொதுவாக இந்த வழித்தடத்தில் விரைவு ரயில்கள்பயண நேரம் 7.5 மணிநேரம் எனவும், சதாப்தி ரயில் பயண நேரம் 7 மணிநேரமாகவும் உள்ளது. அப்படி இருக்க இந்த வந்தே பாரத் ரயில் 6 மணிநேரத்தில் பயணத்தை நிறைவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ள நிலையில், முதல் நிலை இருக்கைக்கு 2 ஆயிரத்து 310 ரூபாயும், இரண்டாம் நிலை இருக்கைக்கு ஆயிரத்து 57 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close