fbpx
Others

அண்ணாமலை–குற்றவாளியை அவசரமாக என்கவுன்ட்டர் செய்தது ஏன்..?

பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை
பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை

எந்த ஒரு வழக்காக இருந்தாலும் அது நீதிமன்றத்திற்கு செல்லும் போது தான் முழுமையான விவரங்கள் தெரியவரும். ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தை பொறுத்தவரை பல அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விவரங்களை தெரிவித்து வரும் நிலையில், அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட காரணம் என்ன?. ஒருவரை என்கவுன்ட்டர் செய்து விட்டால் அந்த குற்றச் சம்பவம் குறித்த வழக்கை முடித்து விடமுடியுமா? மேக்கேதாட்டூவில் அணை கட்டக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. ஆனால், கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். இந்த விவகாரத்தில் விவசாயிகளிடம் நாங்கள் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருப்பது, இதில் மத்திய அரசு தரப்பில் பிரச்னை இல்லை என்பதையே. விவசாயிகள் இந்த போராட்டத்திற்கு எங்களுக்கும் அரைக்கூவல் விடுத்திருக்கிறார்கள். இது மிக மிக முக்கியமான பிரச்னை. எனவே, நாங்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறோம். தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவையில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் நேரடியாக சென்று சமரசம் பேசியாவது காவிரியில் தண்ணீரை கொண்டு வர வேண்டும். நதிநீர் பிரச்னை ஹரியானாவிர்க்கும், பஞ்சாப்பிற்கும் வந்தபோது ஹரியானா அரசை இந்திரா காந்தி டிஸ்மிஸ் செய்துவிட்டார். இதுவரை நரேந்திர மோடி அரசாங்கத்தில் 356 ஐ பயன்படுத்தவே இல்லை. ஒருவேளை நாம் கர்நாடகா மீது நடவடிக்கை எடுத்தால் இங்கு உள்ள தி.மு.க-வினர் என்ன சொல்வார்கள்…கண்டிப்பாக ஜனநாயகமா என கேட்பார்கள். இந்தியாவில் பல்வேறு இடங்களில் நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்னைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் இதை அரசியல் ஆக்கி வருகின்றனர். அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று தமிழகத்தில் கூட்டப்படுகிறது. இதில் அவர்களே ஒரு டிராப்ட் ஒன்றை கையில் கொண்டு வந்துவிட்டு வாருங்கள்.. அனைவரும் டெல்லி செல்லலாம் என்கிறார்கள். முதலமைச்சர் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் அது ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்” என்றார்.

Related Articles

Back to top button
Close
Close