வேலூர்மாவட்டத்தில்பேசிய விஜய் வாக்குறுதிகள் பல அள்ளி வீசினார்…
![]()
வேலூர்மாவட்டத்தில்பேசிய விஜய், “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம். இது நிஜம் என உறுதிமொழி எடுத்து பேச தொடங்கினார். தொடர்ந்துகுட்டிக்கதை ஒன்றை தெரிவித்தார். அடங்காத காளை குறித்த கதையை அவர் தெரிவித்தார். அனுபவம் இல்லை என சொல்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றவாறு எப்படி ஒரு விஷயத்தை அணுகுகிறார் என்பதே முக்கியமானது. மக்களை நேசிக்கும் நல்ல தலைமைஇல்லாததால்இத்தனைஆண்டுகளாகமு.க.ஸ்டாலின்கொடுத்தபொய்யானவாக்கு றுதிகளை நம்பிய மக்களுக்கு வெகுஜன இயக்கமாக வந்தது தான் தமிழக வெற்றிக் கழகம். நான் உங்களை நேரில் இருக்கும் ஊருக்கு வந்து சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் நமக்கெதிராக என்னென்ன சூழ்ச்சிகள் நடக்கிறது என்பது தெரியும். நம் ஆட்சி அமைந்ததும்ஒவ்வொருகிராமத்துக்குநேரடியாகவருவேன்என்பதைசொல்லிக்கொள்கிறேன். வரப்போகும்சட்டமன்றதேர்தல்தமிழ்நாட்டுக்கும்டெல்லிக்குமானதேர்தல்எனமுதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்தார். இந்த தேர்தல் விஜய்க்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நடக்கும் போர். அவரோட ஆட்சியில் தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் என சொல்கிறார். ஆனால் அண்ணா, காமராஜர் ஆட்சியில் அப்படி இருந்தது. இப்போது சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடிக்காரர் நடத்தும் மாநிலமாக மாறி விட்டது.2026ம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தில்லாக நிற்கும். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நடக்கும் தேர்தலான நினைக்க வேண்டாம். இது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய தேர்தல். இந்த தேர்தலில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யை எதிர்க்கிறது. நான் ஊழலை எதிர்க்கிறேன். அந்த காண்டு தான் எல்லாருக்கும். மக்கள் விஜயுடன் இருப்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்கிறார்கள். என் மீது அவதூறு பரப்பினால் அது மக்கள் மீது பரப்புவதற்கு சமம். என்னை அசிங்கமாக பேசினால் அது மக்களை பேசுவதற்கு சமமாகும். இந்த விஜயும் மக்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதது. இதை யாரும் அசைக்க முடியாது. மக்களை நேசிக்கும் விஜய்வேண்டுமா?, மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா?.. தவெகவுக்கு போட்டி திமுக தான் என்பது மக்களுக்கு தெரியும். நாம் சீரியஸாக பேசும்போது சிலர் வாண்டட் ஆக வந்து வண்டியில் ஏறுகிறார்கள். இங்கு காமெடிக்கெல்லாம் இடமில்லை.கரூர் விஷயத்தில் ஏன் என் மீது பழியைப் போட்டீர்கள்?. உங்களுக்கு மனசாட்சி ஒன்று இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா?. எனக்கு எதிரியெல்லாம் யாரும் இல்லை என சொல்லும் நீங்கள் ஏன் எங்களுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுக்க மறுக்கிறீர்கள்.
உங்கள் ஆட்சி தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆட்சி.இங்கு சில அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் ஒரு சில நேரங்களில் அமைதியாக இருந்தாலே போதும். பிரச்னைகள் வராது. மாதம் ஒருமுறை மின் கட்டணம் என சொன்னீங்களே, செய்தீர்களா?.நிறையகிராமங்களில்பேருந்துவசதிஇல்லை எனசொன்னால் திமுகவினர் அனைவ்ரும் கொந்தளித்து விடுகிறார்கள். ஆனால் ஒரு பெண் மினி பஸ்ஸாவது விடுங்கள் என ஏன் கோரிக்கை விடுக்கிறார்கள். We Safe Model என சொல்கிறீர்கள். ஆனால் பெண்கள்WearenotsafeModelஎனசொல்லும்நிலையில்பெண்களின்பாதுகாப்புஉள்ளது.மலைக் கிராமங்களில் பேருந்து, மருத்துவ வசதி இல்லாததால் வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கும் நிலை உள்ளது. 5 வருடம் பதில்சொல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்து வந்து விட்டார். ஆனால் இனி பதில் சொல்லி தான் ஆக வேண்டும். சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் தரமானதாக இருக்கும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பள்ளி, கல்லூரி பாடங்கள் மாற்றியமைக்கப்படும். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களின் தேவைகள் அறிந்து காலத்திற்கேற்ப திட்டங்கள் வகுக்கப்படும் என பல வாக்குறுதிகளை விஜய் அள்ளி வீசியுள்ளார்.