Others
விருகம்பாக்கம்பெண் போலீசுக்கு வளைகாப்பு..
விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் அன்பரசி. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள இவர், பிரசவத்துக்காக சொந்த ஊருக்கு செல்ல உள்ளார். இந்த நிலையில் அன்பரசிக்கு போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நடத்த அவருடன் பணிபுரியும் சகபோலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் பூபதிராஜா தலைமையில் பெண் போலீஸ் அன்பரசிக்கு அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தினார்கள்விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு சக போலீசார் நடத்திய வளையகாப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.