யார் இந்த 7 ’சிங்கப் பெண்கள்’ மத்திய அமைச்சர்கள்..?
பிரதமர் மோடியுடன் பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் குழுவில் மொத்தம் 72 பெண்களில் 7 பேர் அடங்குவர். மோடியின் கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் 10 பெண் இருந்தனர். இந்த முறை முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர் டாக்டர் பார்தி பவார், சாத்வி நிரஞ்சன் ஜோதி, தர்ஷனா ஜர்தோஷ், மீனாட்சி லேகி, பிரதிமா பௌமிக் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்கவில்லை. மீண்டும் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.அமேதி தொகுதியில்போட்டியிட்டஸ்மிருதிஇரானிதோல்வியடைந்தார் ஆகவே,அவருக்குஅமைச்சரவையில்இடமளிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் தேர்தலில் தோல்வியடைந்த சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டும் உள்ளன. இந்த முறை அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள பெண்களின் பட்டியல் இதோ: கைமாறிய சுகாதாரத்துறை.. ஜேபி நட்டாவிற்கு போன “ஹெல்த் மினிஸ்டர்” இலாக்கா.. மோடி முக்கிய முடிவு நிர்மலா சீதாராமன் (பாஜக): ராஜ்யசபா உறுப்பினரான நிர்மலா சீதாராமன், கடந்த ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்தார். புதிய மத்திய
அமைச்சரவையில் உள்ள இரண்டு பெண்களில் சீதாராமனும் ஒருவர். மத்திய அமைச்சரவையில் இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ளார். ஆனால், ஒருமுறை கூட தேர்தல் களத்தில் போட்டியிட்டதில்லை. அன்னபூர்ணா தேவி (பாஜக): ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்னபூர்ணா தேவி, மத்திய அமைச்சரவையில் இரண்டாவது முக்கிய பெண்மணி. இவரது மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவின் ஆதரவை ஒருங்கிணைப்பதில் இவர் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்படுகிறார். முன்பு ஆர்ஜேடியுடன் இணைந்திருந்த அன்னபூர்ணா தேவி, தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு பாஜகவில் சேர்ந்தார். அதன்பின்னர் பாஜக நட்சத்திரமாக மாறினார். இவர் ஜார்கண்ட் தனி மாநிலமாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பு பீகாரில் மாநில அரசியலில் அமைச்சராக பணியாற்றியவர். சாவித்ரி தாக்கூர் (பாஜக): மத்திய அமைச்சராக சாவித்ரி தாக்கூருக்கு வயது 46. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், ஒரு முக்கியமான பழங்குடித் தலைவர். இவருக்கு 2019 மக்களவைத் தேர்தலில் சீட்டு கொடுக்கப்படவில்லை. அதன் பின்னர், இந்தத் தேர்தலில் தார் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார். நிமுபென் பம்பானியா (பாஜக): நிமுபென் பம்பானியா, குஜராத்திலிருந்து பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ள மூன்று பெண்களில் ஒருவர். 57 வயதான இவர் பாவ்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் உமேஷ் மக்வானாவை 4.55 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் ஒரு முன்னாள் ஆசிரியை. 2009 முதல் 10 வரை அடுத்து 2015-18 வரை இரண்டு முறை பாவ்நகர் மேயராக பதவி வகித்துள்ளார். இதேபோல் 2013 முதல் 2021 வரை பாஜக மகிளா மோர்ச்சாவின் மாநில பிரிவின் துணைத் தலைவராக இருந்துள்ளார். ரக்ஷா கட்சே (பாஜக): முன்னாள் பாஜக தலைவர் ஏக்நாத் கட்சேவின் மருமகள்தான் ரக்ஷா கட்சே. இவர் 37 வயதில் மத்திய அமைச்சராகியுள்ளார். இவரது மாமனார் மகாராஷ்டிராவிலிருந்து மூன்று முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர். 2024 மக்களவைத் தேர்தலில் என்சிபி வேட்பாளர் ஸ்ரீராம் பாட்டீலை எதிர்த்து 2.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் இவர். கட்சே பி.எஸ்சி கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர். ஷோபா கரந்த்லாஜே (பாஜக): கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஷோபா
கரந்த்லாஜே (57). முன்பு மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சராக இருந்துள்ளார். எடியூரப்பாவின் நம்பிக்கைக்குரியவர். கரந்த்லாஜே மூன்று முறை மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதியிலிருந்து 2,59,476 வாக்குகள் வித்தியாசத்தில் காங். வேட்பாளர் எம்.வி. ராஜீவ் கவுடாவை தோற்கடித்த கரந்த்லாஜே பெங்களூருவின் முதல் பெண் எம்.பி எனற பெருமைக்கு உரியவர். அனுப்ரியா படேல் (அப்னா தளம்): அப்னா தளத்தின் நிறுவனர் மறைந்த டாக்டர் சோனிலால் படேலின் மகள் இவர். இவர் கடந்த ஆட்சியில் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள மிர்சாபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ரமேஷ் சந்த் பிந்தை 37,810 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.