மூவரணி உருவாகிறதா OR ஒருங்கிணைந்த அதிமுக என்ற குரல் வலிமை பெறுமா…?
ஒருங்கிணைந்த அதிமுக என்பதே அதிமுக தொண்டர்களின் ஒருமித்த குரலாக உள்ளது. ஆனால், தலைவர்களின் எண்ணமோ வேறு வேறாக உள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். செங்கோட்டையனின் இந்த முயற்சிக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன்மற்றும்சசிகலாஆகியோர்ஆதரவுதெரிவித்தனர்.ஆனால், அவருடைய முயற்சி பலனளிக்கவில்லை. மாறாக செங்கோட்டையன் வகித்து வந்த அத்தனை பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு செங்கோட்டையன் இன்று ஓபிஎஸ் உடன் காரில் ஒன்றாக பயணம் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வந்த செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் ஒரே காரில் பசும்பொன் பயணித்து வருகிறார். பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். பசும்பொன் நினைவிடத்தில் இருவரும் டிடிவி தினகரனுடன் இணைந்து மரியாதை செலுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தால் எடப்பாடிக்கு எதிரான அணி உருவாகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரபப்பான இந்த அரசியல் சூழலில், மூவரணி உருவாகிறதா அல்லது இனி ஒருங்கிணைந்த அதிமுக என்ற குரல் வலிமை பெறுமா என்பது குறித்து தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது: அதிமுகவில் இன்னமும் கூட மனக் குறைகளும், பூசல்களும் இருக்கின்றது என்றுதான் இவர்களுடைய பயணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். செங்கோட்டையனைப் பொருத்தவரை அதிமுக ஒருங்கிணைந்து நிற்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியோடு நிற்பவர். ஏற்கனவே அதிமுகவினர் ஒருங்கிணைய வேண்டும் என கெடு விதித்து தனது பதவிகளை எல்லாம் இழந்தார். செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் பதவிகளை இழந்தனர்.அதிமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக செங்கோட்டையன் உள்ளார். அவ்வளவுதான் அதிமுகவைப் பொருத்தவரை அவருடைய அரசியல் அந்தஸ்து. அந்த நிலைமையிலும்கூடஎதிரணியின்தலைவர்ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே வாகனத்தில் பயணிக்கிறார் என்றால் தன்னுடைய மனக்குறை அல்லது தான் இன்னும் சமாதானம் அடையவில்லை என்பதை பொதுவெளியில் அனைவருக்கும் தெரியட்டும் என்று அவர் நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும்
குருபூஜைக்குச்சென்றுள்ளனர்.குருபூஜையில்அரசியல்கிடையாது. ஆனால், குரு பூஜைக்குச் செல்லும்போது ஏதோ ஒரு வகையில் அரசியல் வெளிப்படுகிறது. பொதுவாகவே திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில்இத்தகையஅரசியல்வெளியிடப்படும்போது இதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை ஊகிக்க முடியும்.அந்தவகையில்,அதிமுகவில்கட்சிமீண்டும்ஒருங்கிணைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. குறிப்பாக, விஜயை அதிமுகவுடன் கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி வரிந்து அழைத்தது, உதயகுமார் விஜயை வேண்டிவிரும்பி அழைத்தது போன்றவற்றில் அதிமுக தொண்டர்களுக்கு பெரிய விருப்பம் இல்லை. அதிமுக போன்ற பெரிய கட்சிக்கு அது அழகல்ல என்று நினைத்தனர்.விஜயின் நேற்றைய கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சியின் நிர்வாகி நிர்மல்குமார் கூட்டணி நிலைப்பாடு அப்படியே தொடர்கிறது என்று கூறினார். அதேபோல, பாஜக அதிமுகவுடன் இணையப் போவதில்லை என்றும், விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தெளிவாக கூறிவிட்டார். இந்த சூழலில் அதிமுக ஒருங்கிணைந்தால் தான் வலிமை என்பதை செங்கோட்டையன் நினைக்கிறார். எனவே, செங்கோட்டையன், ஓபிஎஸ் இணைந்து பயணித்ததை ஒத்த கருத்துடைய அரசியல் பயணமாக இதனைப் பார்க்கிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு நேரடி சவால்தான்.
அதற்கான பகிரங்கமான வெளிப்பாடு தான் இந்தப் பயணம். இபிஎஸ் ஒருங்கிணைந்த அதிமுக என்பதற்குத் தயாராக இல்லை. எதிர்காலத்தில் தலைமைக்கு இவர்கள் சவாலாக இருப்பார்கள் என்று இபிஎஸ் கணக்குப் போடுகிறார். இப்போது தான் உள்கட்சிப் பூசலை முடித்து ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துள்ளோம் என்பதும் ஒன்று.அதுமட்டுமல்லாமல் அவருடன் இருப்பவர்களான உதயகுமாரைப் பொருத்தவரையில் தனிப் பிரதிநிதியாக அதிமுகவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வருவதை அவர் விரும்புவதில்லை. ஒருங்கிணைந்த அதிமுக வெற்றிக்கு உதவும் என்பது தொண்டர்களின் கருத்து. ஆனால், தலைவர்களின் கருத்து வேறாக உள்ளது. அதனால், இந்தப் பயணத்தை மட்டும் வைத்து ஒருங்கிணைப்பிற்கான முதல்படி என்றுஎடுத்துக்கொள்ள முடியாது. இதுவரை மறைபொருளாக இருந்த அரசியல் விஷயத்தை வெளிப்படையாக கூறியிருக்கின்றனர் என்று மட்டுமே இதனைப் பார்க்க முடியும் என்றார்.