fbpx
Others

முதன்மை மற்றும் மாவட்ட நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்கேள்வி…

நீதிபதி இப்படி பேசலாமா? லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய சுப்ரீம் கோர்ட்மத்திய பிரதேசத்தை சேர்ந்த முதன்மை மற்றும் மாவட்ட நீதிபதி ஒருவர், கடந்த நவம்பர் இறுதியில் ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில், சம்பந்தமே இல்லாமல் அடுத்தடுத்து சில உத்தரவுகளை பிறப்பித்ததால், நவ. 19ம் தேதி அவரை அந்த மாநில ஐகோர்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது அவர் மீதானஒழுங்குநடவடிக்கையாக அறிவிக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் தரப்பு வாதங்களை முன்வைத்தார். மனுதாரர் நன்மதிப்பை பெற்றவர். அவரது பதவிக்காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர். நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்ததை காரணம் காட்டி, அவரை பணியிடை நீக்கம் செய்தது தவறு. இதை சுப்ரீம் கோர்ட் ஏற்கக் கூடாது என்றார். இதைக் கேட்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் நீதிபதிகளின் ஓய்வு வயதை, 60ல் இருந்து 61ஆக உயர்த்தும் படி, அந்த மாநில அரசிடம் சுப்ரீம் கோர்ட்வலியுறுத்தியிருந்தது. அதன் படி, சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கூட தெரியாத அவர், பணி ஓய்வு பெறுவதாக நினைத்து கடைசி நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு மூத்த நீதிபதியிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தேவைப்பட்டால், அவர் ஐகாேர்ட்டில் நேரடியாக முறையிட்டிருக்கலாம். அதே போல், சுப்ரீம் கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்ததற்கு பதில், ஐகோர்ட்டையே அணுகியிருக்கலாம். அவரது செயல் அதிருப்தி அளிக்கிறது.ஓய்வுபெறுவதற்குமுன்மனுதாரர்சிக்ஸர்அடிக்கதுவங்கியுள்ளது துரதிஷ்வசமானது. ஓய்வு பெறும் முன் அடுத்தடுத்து உத்தரவுகள் பிறப்பிக்கும் பழக்கம் நீதிபதிகள் இடையே தற்போது அதிகரித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையை ஏற்கமுடியாது. மனுதாரர் தனக்கான நிவாரணம் கோரி ஐகோர்ட்டை அணுக வேண்டும். நான்குவாரத்திற்குள் ஐகோர்ட் அதை விசாரித்து வழக்கைமுடிக்கவேண்டும்எனசுப்ரீம்கோர்ட்பெஞ்ச்உத்தரவிட்டது.

Related Articles

Back to top button
Close
Close