மணிப்பூரில் மீண்டும் பதற்றம்..,இணைய சேவை முடக்கம்..
மெய்தி சமூகத்தை சேர்ந்த ஆரம்பை டெங்கோல் அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இம்பாலில் ஆங்காங்கே போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில், வன்முறை காரணமாக ஜூன் 7 நள்ளிரவில் இருந்து இம்பால் மேற்கு, தவுபால், காக்சிங், விஷ்ணுபூரில் 5 நாட்களுக்கு இணையச்சேவை தடை விதிக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபால், காக்சிங், பிஷ்னுபூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் 5 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மணிப்பூரில் தற்போது குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கையை மீறி செல்வதாகவும், இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று, அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாதுபிஷ்ணுபூர்மாவட்டத்திற்குமுழுஊரடங்குஉத்தரவும்பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.இது குறித்த அம்மாநில காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை சமாளிக்க இணையதள மற்றும் மொபைல் டேட்டா, வி.எஸ்.ஏ.டி மற்றும் வி.பி.என் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தடை ஜூன் 7-ம் தேதி இரவு 11:45 மணி முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு அமலில் இருக்கும்.