Others
நீடாமங்கலத்தில் தேசியநாடு டிரஸ்ட் சார்பில் 77-வது குடியரசு தின விழா….
77-வது குடியரசு தின விழா நீடாமங்கலத்தில் தேசியநாடு டிரஸ்ட் சார்பில் கொண்டாடப்பட்டது. பாஜக நகர தலைவர் பி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைப்புசாரா நல சங்க இணைச் செயலாளர் என். ராஜேந்திரன், பாஜக நிர்வாகி ஒளிமதி கலையரசன் முன்னிலை வகித்தனர். தேசியநாடு டிரஸ்ட் தலைவர் எஸ்.எஸ்.குமார் வரவேற்றார். தேசிய கொடியை ஆலய அர்ச்சகர் ஆர். கீர்த்தி வாச குருக்கள் ஏற்றி வைத்தார். பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகளை. அருள் மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் எஸ்.சுரேஷ் நாயுடு வழங்கினார். வெள்ளங்குழி செ. ராம்குமார் நன்றி கூறினார்.
