நமது சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம்-செய்தி
நமது சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் மற்றும் சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (சட்டக் கல்லூரி) இணைந்து மாபெரும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாமினை நேற்றைய தினம் (22/09/2023) அமரம்பேடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. பொன் ரமேஷ் மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. ஆனந்த் குமார் அவர்களும் சிறப்புரையாற்றினர்.இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று சிறப்பித்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. பரசுராமன் அவர்களுக்கும், அகில இந்திய தலைவர் எழுச்சிவேந்தன் திரு.ஜே கே ஆர் அவர்களுக்கும், மாநிலத் தலைவர் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.எஸ் எம் எஸ் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .இந்நிகழ்ச்சியில்சுமார்100க்கும்மேற்பட்டசட்டக்கல்லூரிமாணவமாணவியர்களும் மற்றும் 60 க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பங்கேற்றனர்.*இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் அதனை எவ்வாறு சட்டரீதியாக அணுகுதல் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்ச்சி துவக்கம் முதல் முடிவு வரை சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்து அதனை முன்னிருந்து கவனித்துக் கொண்ட திரு.தினேஷ் – காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.நமதுவிழிப்புணர்வு முகாமில் வரவேற்பிலிருந்து நன்றி உரை வரை சிறப்பாக வர்ணனை ஆற்றிய திரு.G.R.கோபி- மாநிலபொதுச்செயலாளர்அவர்களுக்குஎனதுமனமார்ந்த பாராட்டுக்கள்.இந்நிகழ்ச்சியினைஉறுதுணையாக இருந்து சிறப்பாக செயலாற்றிய அமரம்பேடு ஊராட்சி மன்றத்தைச்சார்ந்தநண்பர்களுக்கும், உறுதுணையாக இருந்த அனைத்து கழக உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி.