fbpx
RETamil News

இரு சக்கர வாகனம் ஓட்டும் போது பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்படும் -உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்.

இரு சக்கர வாகனம் ஓட்டும் போது பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் அணிய சொல்ல வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கின் கீழ் உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

பத்திரிக்கை , தொலைக்காட்சிகளின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று அரசு கூடுதல் தலைமை வழக்கரிஞர்கள் உயர் நீதி மன்றத்தில் உறுதி அளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 31-ஆம் தேதி நீதி மன்றம் ஒத்திவைத்தது.

தமிழகத்தில் கட்டாய சீட் பெல்ட் , ஹெல்மட் குறித்த நடவடிக்கை பற்றி அறிக்கை தர வேண்டும் என்று ஆணையிட்டது.

சீட் பெல்ட் , ஹெல்மெட் அணிவது குறித்து முறையான செயல்பாடு இல்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இரு சக்கரம் ஓட்டுபவர் மற்றும் அமர்ந்து செல்பவர் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். மேலும் கார்களில் பயணிப்போரும் கண்டிப்பாக சீட்பெல்ட்  அணிய வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது.

இந்நிலையில் சீட் பெல்ட் , ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

Related Articles

Back to top button
Close
Close