தேனி – சின்னமனூரில் 20×20 அடி நீள,அகலம் கொண்ட அடிகுழாய்காணவில்லை..?
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் என்.கே.பி., அரசு பொது மருத்துவமனை முகப்பின், எதிர்புறம், வட்டார வளர்ச்சி அலுவலகம் காம்பவுண்ட் சுவர் ஒட்டி இருந்த அடி குழாயானது நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால்,……..20×20 நீள, அகலம் கொண்ட அடிகுழாய் பகுதியினை ஒரு சில ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு (10 அடி நீளம் 4 அடி அகலம்) தற்போது, என 5 அடியாக சுருங்கி அப்பகுதி மக்களுக்கு எள்ளளவும் பிரயோஜனம் இல்லாத வகையில் கழிவு மற்றும் கழிவு நீர் ஆக்கிரமித்து சுகாதார சீர்கேட்டோடு இருந்து வருவதாக சாமிகுளம் பகுதி வாழ் மக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர் !!!இது குறித்து சமூகநல ஆர்வலர்கள், மற்றும் பத்திரிக்கையாளர்கள் களத்தில் ஆய்வு செய்த போது……என்.கே.பி., அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள இந்த அடிகுழாயானது, 1980 காலகட்டத்தில் இருந்து இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளையும் குறிப்பாக, இறப்பு நிகழ்வுகளில் “நீர் மாலை” எடுப்பதற்கும் இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றது…..உதாரணத்திற்கு, சின்னமனூர் நகராட்சியில் அங்கம் வகித்து வரக்கூடிய சாமிகுளம் பகுதி மக்களுக்கு நகர நிர்வாகம் சார்பாக ஓர் ஐந்து நாட்கள் குடிதண்ணீர் வழங்க இயலவில்லை என்றால், இந்த அடிகுழாய் தண்ணீர் தான் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதும், நீர் ஆதாரமாக விளங்கக்கூடியதுமான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.!சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் டெண்டர் எடுத்து கடை வைத்து நடத்தி வரும் ஒரு சில கடைக்காரர்களால் இந்த இடம் பகிரங்கமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 20 அடி அளவு கொண்ட இந்த அடிகுழாய் மற்றும் அதன் சுற்று பகுதி இடமானது தற்போது 5 அடியாக சுருங்கி சுக்கு நூறாக காட்சி அளித்து வருகிறது என்றும்,அவ்வாறாக, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைக்காரர்களால் கடைகளில் சேரும் கழிவுகளை அந்த அடிகுழாய் இடத்தில் கொட்டியும் கழிவு நீரை கடத்தியும், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய இந்த இடத்தில் நகர நிர்வாகத்திற்கு தெரிந்தே ஆக்கிரமிப்போடு, சுகாதார சீர்கேட்டை செயற்கையாக உண்டாக்கி வருகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது ! இதனால் இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவைகள் மற்றும் ஈமக்கிரியை எனும் துக்க/இறப்பு நிகழ்வில் “நீர் மாலை” எடுப்பதிலும் பெரிதும் சிரமம் அடைந்து வருவதாக வேதனை தெரிவித்து நகராட்சி நிர்வாகம் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்??? இவையெல்லாம் ஒரு புறம் இருக்க..என்.கே.பி., அரசு பொது மருத்துவமனை பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு பொது மருத்துவமனை, மின்வாரிய அலுவலகம், கூட்டுறவு வங்கி, நியாய விலைக் கடைகள், தீயணைப்பு நிலையம், சில தனியார் பள்ளிகள், பல அரசு பள்ளிகள், மயான வழி என அனைத்து தரப்பு மக்களும் அதிகம் கூடும் மற்றும் அதிகம் பயன்படுத்தும் இந்த வழித்தடத்தில்…….40 அடியாக இருந்த பொது போக்குவரத்திற்கான பாதையானது தற்போது நகராட்சி நிர்வாகத்தின் ஆணவம் மிகுந்த அலட்சியத்தால் ஆக்கிரமிப்புக்காரர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டு அந்த 40 அடி பாதையானது தற்போது 12 அடி பாதையாக சுருங்கி பொது போக்குவரத்திற்கு பெரும் சிரமத்தை உண்டாக்கி வருகிறது ? நகராட்சி நிர்வாகத்தின் கண்டு(ம்) கொள்ளாத அலட்சியத்தால் இவ்வாறான ஆக்கிரமிப்புகளால் பள்ளி பேருந்துகள், குறிப்பாக 108 எனும் அவசர ஊர்திகள் செல்லக்கூட பெரும் இடையூறோடு சிரமம் அடைந்து வருகின்றனர் எனவும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உயிர் காக்கும் 108 வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.? மேற்கண்ட அடிகுழாய் பகுதி மற்றும் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி, அந்த அடி குழாயினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், 40 அடி பொது போக்குவரத்திற்கான பாதையை 12 அடியாக மாற்றி பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் அவ்விடத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நகராட்சி நிர்வாகம் முனைப்பு
காட்ட வேண்டும் என சாமிகுளம் பகுதி வாழ் மக்கள் சார்பாக,சமூகநலஆர்வலர்கள்மற்றும்பத்திரிக்கையாளர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றன!!! இந்த பிரச்சினைக்கு தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் ??? … ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.