டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றார் …

அமெரிக்கஅதிபர்தேர்தலில்வெற்றிபெற்றடொனால்டுடிரம்ப்நேற்றுநடந்தவிழாவில்பதவியேற்றுக்கொண்டார்.பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு இசைநிகழ்ச்சியில்,கலந்துகொண்டார். இதில், 70களின் டிஸ்கோ ஹிட் பாடல்கள் மீதான அவரது காதல் முழுமையாக வெளிப்பட்டது.கேக் வெட்டும் விழாவில் டிரம்பிற்கு ஒரு வாள் வழங்கப்பட்டது. அவர் கையில் வாளுடன் நடனமாடத் தொடங்கியபோது, அங்கிருந்த பலரும் பாடலின் தாளங்களுக்கு ஏற்ப நடனமாடத் தொடங்கினர்.டிரம்ப் கையில் ராணுவ வாளுடன் நடனம் ஆடிக்கொண்டு, கேக் வெட்டிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன், பதவியேற்றுக்கொண்ட உற்சாகத்தில் அவர் தன்னுடைய மனைவி மெலனியா டிரம்ப் உடனும் கைகோர்த்து ஜோடி நடனம் ஆடினார். அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற மிக வயதான நபர் என்ற பெயர் அவருக்கு கிடைத்திருக்கிறது. 2020ல் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது அவருடைய வயது 78 ஆண்டுகள் 61 நாட்களாக இருந்தது. இப்போது டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற போது அவருடைய வயது 78 ஆண்டுகள் 220 நாட்களாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிபர் பதவி ஏற்பு விழா அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கேபிடோல் எனப்படும் பார்லிமென்ட் உள்ளரங்கில் நடந்தது.அமெரிக்காவின் 47வது அதிபராகிறார் டிரம்ப். அமெரிக்காவில் இப்போது கடுமையான பனிக்காலம் என்பதால் டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சி உள்ளரங்கத்தில் நடந்தது. இதற்கு முன் 1985ல் ரொனால்ட் ரீகன் அதிபராக பதவியேற்ற நிகழ்வு உள்ளரங்கில் நடந்தது. பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், உலகப் பணக்காரர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பர்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக வெளிநாட்டு தலைவர்களை அழைத்து இருந்தார். பொதுவாக பாதுகாப்பு காரணங்கள் கருதி அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களை அழைக்க மாட்டார்கள். ஆனால் அந்த பாரம்பரியத்தை உடைத்திருக்கும் டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து இருக்கிறார். சீனா சார்பாக துணை அதிபர் கலந்து கொண்டார். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பங்கேற்றார்.