Others
சத்தியமங்கலம்-தலைமை காவலருக்கு முதல்வர் காவல் பதக்கம்..

ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில், தலைமைக்காவலராக பணியாற்றி வருபவர் சதாசிவம். இவரின் சீரிய பணிக்காக, தமிழ்நாடு அரசு 2025ம் ஆண்டிற்கான, தமிழ்நாடு முதல்வரின் காவல் பதக்கத்தை 76வது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா வழங்கினார். சதாசிவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்