fbpx
Others

கடந்தாண்டு நடந்த திருட்டுகளில் 55 சதவீதம் மட்டுமே கண்டுபிடிப்பு…!

கோவை மாநகர பகுதிகளில், கடந்த ஆண்டு நடந்த திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் போலீசார், 55 சதவீத வழக்குகளில் மட்டுமே, குற்றவாளிகளை கண்டு பிடித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.2024ம் ஆண்டு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கொள்ளை, திருட்டு உள்ளிட்ட 1281 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் வெறும், 714 (55 சதவீதம்) வழக்குகளில் மட்டுமே குற்ற வாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.2023ம் ஆண்டு 1419 சம்பவங்களில் 808 (57 சதவீதம்) வழக்குகளில், குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். 2023ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024ம் ஆண்டு 2 சதவீதம் குறைவு.இதில், ரூ.7.82 கோடி மதிப்பிலான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து ரூ.5.89 கோடி மீட்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு ஏற்பட்ட 14.78 கோடியில் இருந்து, ரூ.10.24 கோடி மீட்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்

காவல்துறையால் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் !Coimbatore District Police
:கோவை-காவல்துறையால் பறிமுதல் செய்த வாகனங்களுக்கான பொது ஏலம், அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ்., மைதானத்தில் வரும் 23ம் தேதி நடக்கிறது.

கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கோவை மாவட்ட போலீசாரால், மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட மூன்று கனரக வாகனங்கள், ஏழு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 62 இருசக்கர வாகனங்கள் என மொத்தம், 72 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. வாகனங்களை ஏலம் எடுத்தவுடன், முழுத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி., தொகையை ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close