ஒன்றிய பாஜக அரசுதான்மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது ஒன்றிய பாஜக அரசுதான் என திருப்பூர் எம்.பி. சுப்பராயன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய திருப்பூர் எம்.பி. சுப்பராயன், “இரட்டை என்ஜின் ஆட்சி எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை இந்தியாவுக்கே அம்பலப்படுத்தி உள்ளது மணிப்பூர்.மணிப்பூரை கலவர பூமியாக மாற்ற யார் காரணமாக இருந்தார்களோ, அவர்கள்தான் அதை சரி செய்ய வேண்டும். எனவே. இரு தரப்பு மக்களையும் அழைத்துப் பேசி தீர்வு ஏற்படுத்த வேண்டியது ஒன்றிய பாஜகஅரசின்கடமை.நாடாளுமன்றஉறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த வேண்டும். 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவை தொகுதி மேம்பாட்டுக்கு ரூ.5 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு வழங்குகிறது. ஆனால் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ.3 கோடி மேம்பாட்டு நிதியாக தமிழ்நாடு அரசு வழங்குகிறது. தமிழ்நாட்டை குறி வைத்து அடிக்கும் பாஜக ஆட்சியாளர்கள், தொகுதி மேம்பாட்டு நிதியை ஏன் உயர்த்தவில்லை?. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வேண்டாம். அந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டித் தரும் திருப்பூருக்கு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.