Others
ஸ்ரீ பத்ரகாளிஅம்மனுக்கு அபிஷேகமும்,திருவிளக்கு பூஜையும், தீபாரதனைநடைபெற்றது…

சென்னை செங்குன்றம் அருகில் உள்ள நல்லூர் ஊராட்சி, ஆட்டந்தாங்கல் கிராமம், விஜயாகார்டன் பகுதியில் இருந்து அருள்வழங்கும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜையும், தீபாரதனை வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது.பக்த கோடிகள், மெய் அன்பர்கள் திரளாக கலந்து கொண்டுஅருள்மிகு பத்ரகாளியம்மன்அருள்மிகு சுடலைமாடசாமி
பரிபூரண அருளை பெற்றனர்.