fbpx
Others

ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்….

நம் நாட்டில் சத்ய சாய் பாபாவுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவர் மறைந்த நிலையில் அவர் உருவாக்கிய ஸ்ரீ சத்ய சாய் பாபா மத்திய அறக்கட்டளை தொடர்ந்து தொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த அறக்கட்டளை மூலமாக ஆன்மிக பணிpm-narendra-modi-meets-the-trustees-of-sri-sathya-sai-central-trust மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்ற மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் சேவையாற்றிவருகிறது.ஏழைகள்பயனடைந்துவருகின்றனர். மேலும் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் இந்த அறக்கட்டளை நிறைவேற்றி கொடுக்கிறது. இந்நிலையில் தான் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் குழுவினர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அறக்கட்டளையின் மேலாண் அறங்காவலர் ஆர்ஜே ரத்னாகர், அறங்காவலர்கள் நீதிபதி வி ராமசுப்பிரமணியன், ரியுகோ ஹிரா, எஸ்எஸ் நாகானந்த், அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்ட்யா, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷாண் ரெட்டி உள்ளிட்டவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் வரை நடந்தது. இந்த வேளையில் பிரதமர் மோடி, சத்ய சாய்பாபாவுடன் நிகழ்ந்த சந்திப்பு பற்றி பகிர்ந்து கொண்டார். மேலும் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ள செயல்பாடுகள் குறித்த அறங்காவலர்கள் பிரதமர் மோடியிடம் கூறினர். மேலும் விழாவுக்கு வரும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தனர். அந்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார். பிரசாந்தி நிலையம் வந்து சத்யசாய் பாபாவின் ஆசியை பெற விரும்புவதாக மோடி கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close