fbpx
Others

  ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட இளைஞர் அணி-சிறப்பு செய்தி.

ஶ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட இளைஞர் அணி சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதிக்குள் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தூமனூர் மற்றும் செம்புக்கரை பழங்குடியினர் குடியிருப்புகளில் உள்ள நூறு குடும்பங்களுக்கு அன்னதானம், உடைகள், போர்வைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. பிரசாதத்தைப் பெற்றுக் கொண்ட கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். மிகவும் கடினமான பாதையை கடக்க தமிழ்நாடு சிறப்பு காவல் படை (ஆனைகட்டி கோட்டம்) அவர்களின் வாகனத்தின் அழைத்துச் சென்று உதவினர். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், போத்தனூர், ஸ்ரீராம் நகர், குனியமுத்தூர், சிங்காநல்லூர், வடவள்ளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் திரு. உதயகுமார் மற்றும் திரு.கார்த்திக் நிறுவனத்தின் உறுப்பினர்கள் பலர்ஏற்பாடு செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close