விஷாரம் நகர பாமக ஆலோசனைக் கூட்டம் -சிறப்பு செய்தி

ராணிப்பேட்டை மாவட்டம்
வருகின்ற மே மாதம் 11ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது இம்மாநாட்டில் பங்கேற்பதை குறித்து நேற்றுவிசாரம் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் அரிகரன் தலைமை தாங்கினார், நகரத் தலைவர் தாமோதரன் அனைவரையும் வரவேற்றார் மாவட்டத் துணைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களான விஜயகுமார், ரவிச்சந்திரன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில துணைச் செயலாளருமான கே எல். இளவழகன் மாவட்டச் செயலாளர்எஸ்.பி.சண்முகம், மாவட்டத் தலைவர் என்.சுப்பிரமணி, மாவட்ட இளைஞர் அணி சங்கத் செயலாளர் பகவான் கார்த்தி, மாவட்ட தொழில் சங்க பேரவை பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர் மாநாட்டிற்கு விஷாரம் நகரத்திலிருந்து சுமார் 20 வாகனங்கள் செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இரண்டாவது தீர்மானமாக ராசாத்துப்புரம் கிராமத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருட்களை சரிவர விநியோகம் செய்யப்படுவதில்லை இதேநிலைத் தொடருமானால் பாமக சார்பில் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மாவட்ட மாணவரணி தலைவர் திருக்குமரன் நன்றி கூறினார்.