fbpx
Others

விமானவிபத்தி…?

Ajit Pawar Plane Crash-Lands in Baramati while landing Maharashtra shocker What really happenedமகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று விமான விபத்தில் உயிரிழந்தார். அஜித் பவார் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சவுந்தர்யா முதல் விஜய் ரூபானி வரை விமான விபத்துகளில் இதற்கு முன்பாக உயிரிழந்த முக்கிய பிரமுகர்கள் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.மகாராஷ்டிர துணை முதல்வராக இருப்பவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜித் பவார்) தலைவராக இருக்கும் இவர், மகாராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி அரசில் முக்கிய தலைவராக உள்ளார். சரத் பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார், உள்கட்சி பூசலையடுத்து கட்சியை கைப்பற்றினார்.அஜித் பவார் துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இன்று தனது தொகுதியான பாராமதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளார். விமானம் இன்று காலை 8.45 மணியளவில் பாராமதியில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் அஜித் பவார் உள்பட 4 பேர் பலியாகியுள்ளனர். அஜித் பவார் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்துகளில் இதற்கு முன்பாக உயிரிழந்த முக்கிய பிரமுகர்கள் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.மோகன் குமாரமங்கலம்: முன்னாள் மத்திய அமைச்சரும் (மத்திய எஃகு அமைச்சர்), முக்கிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மோகன் குமாரமங்கலம். இவர் கடந்த மே 30, 1973 அன்று விமான விபத்தில் சிக்கினார். இவர் பயணித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லிக்கு அருகே விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் நிகழ்விடத்திலேயே அவர் பலியானார்.சஞ்சய் காந்தி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி. ராஜீவ் காந்தியின் சகோதரரான சஞ்சய் காந்தி அதிரடியான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர். இவர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் பலியானார். டெல்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையம் அருகே இந்த விமான விபத்து நடைபெற்றது. மாதவ்ராவ் சிந்தியா: ராஜஸ்தானில் பாரம்பரியமிக்க அரச குடும்பத்தை சேர்ந்தவர் மாதவ்ராவ் சிந்தியா. காங்கிரஸ் கட்சியில் இணைந்து ராஜீவ் காந்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இவர் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கினார். உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே சென்ற போது மோசமான வானிலையால் அவரது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. 46 வயதிலேயே மாதவ்ராவ் உயிரிழந்தார். இவரது மகன் ஜோதிராதித்யா சிந்தியா ஆவார்.
ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி: ஆந்திர முன்னாள் முதல்வரும் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையுமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். நல்லமலா மலைகளில் ஏற்பட்ட துயரமான ஹெலிகாப்டர் விபத்தில் இவர் பலியானார். நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. பிரச்சார சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பும் வழியில், அவரது பெல் 430 ஹெலிகாப்டர் பலத்த மழையில் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் இருந்த மற்றவர்களும் உயிரிழந்தனர். நடிகை சவுந்தர்யா: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சவுந்தர்யா. பாஜகவிற்காக பிரசாரம் செய்ய சென்ற போது இவர் விமான விபத்தில் சிக்கினார். ஏப்ரல் 17, 2004 அன்று பெங்களூரில் உள்ள ஜக்கூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, சவுந்தர்யா பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சவுந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் உட்பட பலர் உயிரிழந்தனர்.டோர்ஜி காண்டு: அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டு. இவர் 2011ஆம் ஆண்டு மே 4 அன்று தவாங்கிலிருந்து இட்டாநகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் டோர்ஜி காண்டு உயிரிழந்தார்.
முப்படை தளபதி பிபின் ராவத்: நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி குன்னூர் அருகே இந்திய விமானப்படையின் மி-17 ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஜெனரல் பிபின் ராவத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 12 பேர் உயிரிழந்தனர். விஜய் ரூபானி: குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் சிக்கி பலியானார். அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் உயிர் தப்பினார். இந்த விமானத்தில் லண்டனுக்கு சென்ற விஜய் ரூபானி உயிரிழந்தார்.

Related Articles

Back to top button
Close
Close