Others
‘விநாயகர் சதுர்த்தி’ பிரம்மாண்ட கலச விநாயகர் சிலை–கொளத்தூர் பூம்புகார்
*விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு கொளத்தூர் பூம்புகார் நகரில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கலச விநாயகர் சிலை! சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரில் இந்து முன்னணி இந்து இளைஞர் எழுச்சி நற்பணி மன்றத்தின் சார்பில் 8ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு 3600 கலசங்களால் ஆன 40 அடி உயரத்தில் பிரம்மாண்ட கும்பகலச விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது.
அப்பகுதி பொதுமக்கள் ஆவலுடன் வருகைவந்து சாமி தரிசனம் செய்து விநாயகரை வழிபட்டுச் சென்றனர். மேலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்து வணங்கி செல்கின்றனர்