விஜய்—பெரிய அளவில் பணம் பலம் இல்லாமல் தேர்தலை எப்படி எதிர்கொள்ள முடியும்..?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத கால மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது முதல் மாநாட்டில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாகவும், கூட்டத்திற்க்கு வரும் படி அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். இதனால் தவெகவின் கூட்டணியில் முக்கிய அரசியல் கட்சிகள் இணையும் எதிர்பார்ப்புஏற்பட்டது.அதற்குஏற்பதவெகவுடன்அதிமுககூட்டணிபேச்சுவார்த்தைநடத்தியது.ஆனால்100தொகுதிகள்ஒதுக்கவேண்டும்,2அரைஆண்டு களுக்கு முதலமைச்சர் பதவி என பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.இதனால் தவெகவுடன் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்ட அதிமுக, பாஜக பக்கம் சாய்ந்தது. அடுத்தாக விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தவெகவில் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் இருந்து இந்த கட்சிகள் வெளியேறாத காரணத்தால் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அடுத்ததாக காங்கிரஸ் கட்சி எப்படியாவது தன்னோடு கூட்டணி வந்துவிடும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதற்கும் எண்டு கார்டு போடப்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி தனியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் தான் தவெக சார்பாக கடந்த மாதம் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது. முதல் நாளே 10ஆயிரத்திற்கும்
மேற்பட்டவர்கள் போட்டி போட்டு விருப்ப மனுவை வாங்கி சென்றனர். ஆனால் விருப்ப மனுவை திருப்பி வழங்கியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாகவே தகவல் வெளியானது. அடுத்தாக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில் 300க்கும் மேற்பட்டவர்கள் முதல் கட்டத்தில் போட்டிபோட ஆர்வம்தெரிவித்திருந்தநிலையில்,கூட்டணிஇல்லாமல் தேர்தலைஎதிர்கொள்ளவதா.எனஅலறியுள்ளனர்.இதில் பெரும்பாலானோர்பின் வாங்கியுள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது. அதிலும் தேர்தலில் சீட்டை உறுதி செய்ய ஓரு கோடி ரூபாயும், தேர்தல் செலவிற்கு 2 கோடி ரூபாயும் கட்டாயம் இருக்க வேண்டும் என தவெக தலைமை உத்தரவால் பலரும் அலறியுள்ளனர். இது தொடர்பாக தவெக நிர்வாகி கூறுகையில், கூட்டணியோடு தேர்தலை எதிர்கொண்டால் ஏதோ ஒரு அளவிற்கு நிதியை திரட்டியிருக்க முடியும். பெரிய அளவில் பணம் பலம் இல்லாமல் தேர்தலை எப்படி எதிர்கொள்ள முடியும் என கேள்விஎழுப்பிவருகிறார்கள்.இதனால்தவெகநிர்வாகிகளை சமாதானம் செய்து தேர்தலில் களம் இறங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே வரும் நாட்களில் தான் வேட்பாளர் தேர்வில் தவெக என்ன செய்யப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.