fbpx
Others

விஜய்–சாரி’மா மாடல் ஆட்சியாக மாறிவிட்டது திமுக..

திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி வேண்டி நடந்து வரும் தவெக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கருப்பு டீ சர்ட் அணிந்து பங்கேற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் தவெக ஆர்ப்பாட்ட மேடையில் லாக்-அப் மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியது முதலே விஜய் வெள்ளை சட்டை மற்றும் சந்தன நிற பேண்ட் அணிந்தே கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். பனையூரில் நடந்த கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்திலும் கூட விஜய் அரசியல்வாதிக்கான லுக்கிலேயே இருந்தார்இதனை ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பின்பற்றி விஜய் செய்வதாக கிண்டல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பாக சென்னையில் உள்ள சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் விஜய் அரசியலுக்கு வந்தபின் விஜய் பங்கேற்கும் முதல் ஆர்ப்பாட்டம் இதுதான். இதனால் ஆயிரக்கணக்கான தவெகவினர் சிவானந்தா சாலையில் குவிந்தனர். ஆர்ப்பாட்டம் 10 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக தலைவர் விஜய் காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்த மேடைக்கு வந்தார்.கருப்பு டீ சர்ட் அணிந்து கைகளில் சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்ற பதாகைகளை வைத்திருந்தார். முதல்முறையாக விஜய் கருப்பு டீ சர்ட் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.அதுமட்டுமல்லாமல் தவெக ஆர்ப்பாட்ட மேடையில் லாக் அப் மரணத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு குடும்பங்களையும் மேடை ஏற்றி இருக்கின்றனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசுகையில், அஜித் குமார் குடும்பத்தினரிடம் சாரி கேட்டதை போல், லாக் அப் மரணத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களிடமும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் முதல்வரிடம் இருக்கும் ஒரே பதில் சாரி மட்டும்தான். திமுகவின் விளம்பர மாடல் ஆட்சி, இப்போது சாரி’மா மாடல் ஆட்சியாக மாறிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close