வால்பாறையில்வசித்து வரும் 150 குடும்பங்கள்–2026 சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை…


கோவை மாவட்டம்
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சேடல் டேம் மேற்கானும் முகவரி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் கடந்த 53 ஆண்டுகளாக தொடர்ந்து வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அனைவரும் பெரும்பாலும் தேயிலை தோட்டங்களில் தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என அரசின் பல்வேறு துறைகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டும், பல முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை எந்த ஒரு தீர்வும் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வீட்டுமனைபட்டாஇல்லாதகாரணத்தால்,குடிநீர்வசதி,சாலைவசதி,மின்சாரம்,கழிப்பிடம், வீட்டு வசதி திட்டங்கள் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல், கடுமையான சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு நிர்வாகத்தை நாடி அளிக்கும் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்காமல் நிராகரித்து, புறக்கணித்து வருவதாகவும், இதனால் தங்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து சேடல் டேம் ஊர் பொதுமக்கள் சார்பில் வெளியிடப்பட்ட மனுவில்,“எங்களின் நிலையை கருணையுடன் பரிசீலனை செய்து, உரிய ஆய்வு மேற்கொண்டு விரைவில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும்,“வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை என்றால்,சேடல்டேம்ஊர்பொதுமக்கள்அனைவரும்ஒன்றிணைந்து2026சட்டமன்றத்தேர்தலைபுறக்கணிப்போம்” என கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.53 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசித்து வரும் தொழிலாளர் குடும்பங்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு அரசு விரைந்து தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு வால்பாறை பகுதியில் அதிகரித்துள்ளது. கோவை மாவட்ட புகைப்படகலைஞர் ஜெயப்பிரகாஷ். D