fbpx
Others

வால்பாறை பகுதியில் உணவை தேடி வனவிலங்குகள்….?

வால்பாறை பகுதியில் வனவிலங்குகளுக்கு உணவு வழங்கும் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் கவலை
கோவை மாவட்டத்திற்குட்பட்ட மலைப்பகுதியாக விளங்கும் வால்பாறை, இயற்கை வளம், பசுமை சூழல் மற்றும் வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.இயற்கை காட்சிகளை ரசிப்பதுடன், காட்டு விலங்குகளை நேரில் காணும் அனுபவமும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்துகிறது. ஆனால், சிலர் அறியாமையாலோ அல்லது பொழுதுபோக்கு நோக்கத்தாலோ வனவிலங்குகளுக்கு தங்களுடன் கொண்டு வரும் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதனால் விலங்குகள் மனிதர்கள் வழங்கும் உணவின் சுவையை அறிந்து, இயற்கையான உணவு தேடும் பழக்கத்தை இழந்து வருகின்றன என கூறப்படுகிறது.இதன் விளைவாக, குரங்குகள் மற்றும்பிறவனவிலங்குகள்சாலையோரம்நிற்கும்வாகனங்களுக்குஅருகேவந்துஉணவுப்பொருட்களைபிடுங்கிச்செல்வதும்,குடியிருப்பு  பகுதிகளுக்குள்நுழைவதும்அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில சமயங்களில் கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்களுக்குள் புகுந்து உணவு தேடும் சம்பவங்களும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனும் சிரமத்துடனும் வாழ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கூறுவதாவது, “வனவிலங்குகளுக்கு மனிதர்கள் உணவு வழங்குவது இயற்கைச் சமநிலையைபாதிக்கும் செயல்.இதுவிலங்குகளின்இயல்பானவாழ்வியலைமாற்றுவதோடு,மனிதர் –  விலங்கு மோதல்களுக்கும்வழிவகுக்கிறது”எனஅவர்கள்எச்சரிக்கின்றனர்.எனவே,வனத்துறை அதிகாரிகள் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் “வனவிலங்குகளுக்குஉணவு அளிக்கவேண்டாம்”என்றஎச்சரிக்கைபலகைகளைஆங்காங்கேஅமைத்து,விதிமுறை  களைமீறும்நபர்களுக்குஅபராதம்விதிக்கும்நடவடிக்கைகளைஎடுக்கவேண்டும்என்றுபொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வுஏற்படுத்தும்வகையில்பிரசுரங்கள்,அறிவிப்புபலகைகள்மற்றும்சமூகஊடகங்கள்மூலம்பிரச்சாரங்கள்மேற்கொள்ளப்படவேண்டும்என்றும்வலியுறுத்தப்பட்டுள்ளது.இயற்கையை ரசிக்க வருபவர்கள், இயற்கையின் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாகும். கோவை மாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ் . தே

Related Articles

Back to top button
Close
Close