ராணிப்பேட்டை– வாலாஜாபேட்டை நகராட்சி–சிறப்பு செய்தி
ராணிப்பேட்டை மாவட்டம்
வாலாஜாபேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நகராட்சி சார்பாக ஆடு மாடு, கோழி பன்றி இவற்றின் கடைகள் திறப்பதோ அல்லது இறைச்சி விற்பதோ தடை செய்யப்பட்டுள்ளது என நகராட்சி சார்பாக கடிதம் வழங்கப்பட்டது நகராட்சி ஆணையர் இளையராணி உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் தூய்மை பணியாளர்களைக் கொண்ட குழுவினர் வாலாஜா நகர் முழுக்க 17 கடைகள் உள்ளன அதில் ஆய்வு செய்யப்பட்ட 12 கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக கடை திறந்து கோழி இறைச்சி விற்பனை செய்வதை கண்டறியப்பட்டு இந்த கடைகளில் இருந்து சுமார் 120 கிலோ கோழி இறைச்சி மற்றும் எடை தராசு கத்தி ஆகியவை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்கள் முன்பாக கிருமி நாசினி பினாயில் தெளிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் புதைக்கப்பட்டன..