ராணிப்பேட்டை–திமிரி அடுத்த வெங்கடாபுரம் ஆதிதிராவிட பொதுமக்கள் சாலை மறியல்.
திமிரி அடுத்த வெங்கடாபுரம் ஆதிதிராவிட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சி ஆதி திராவிட பொதுமக்கள் சுடுகாடு பாதை மற்றும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்களுக்கு வருவாய் துறை மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் மற்றும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் துணை போவதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இப் போராட்டத்தின் போது தலைவர் சேகர் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதிக்கு மின்விளக்கு வடிநீர் கால்வாய் சாலை அமைத்து தருவதில் பாரபட்சம் பார்ப்பதாகவும் 100 நாள் ஏரி வேலை தடுத்து நிறுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் திமிரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து போகாமல் துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக கூறினர்