மோட்டார் சைக்கிள் மீதுகார்மோதல்-அவிநாசி
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் மோட்டார் சைக்கிள் மீது மோதல் பிறந்த நாளில் இந்த பரிதாபம் அவிநாசி மே.9
அவிநாசி அடுத்துள்ள தேவராய பாளையத்தை சேர்ந்த சண்முகம் மகன் சரவணன் (28)பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும்.தனது நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்பொழுது அவிநாசி மங்கலம் ரோட்டில் ஒரு வளைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக வந்த கார் சரவணன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவிநாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்ட ரிப்போர்ட்டர் ஞா. ஜெயபாண்டியன்